மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துனை ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம் வேலூர், திருவண்ணாமலை உட்பட
வேலூர், நவ.6: வேலூர், திருவண்ணாமலை உட்பட மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கோயம்புத்தூர் ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம் ஆணையராகவும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சிட்கோ) பொதுமேலாளர் சிவசுப்பிரமணியன், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு வன்னிய குல ஷத்திரிய பொது அறநிலைய பொறுப்பாட்சிகள் நிலை கொடைகள் வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை மேலாண்மை இயக்குனர் உட்பட 26 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனஞ்செயன், சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குனராகவும், திருவண்ணாமலை சிப்காட் விரிவாக்கம் (நிலஎடுப்பு) தனித்துணை ஆட்சியர் கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனராகவும், திருவண்ணாமலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், சென்னை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முதன்மை வருவாய் அலுவலர் உட்பட 38 தனித்துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.