வேலை செய்த கடையில் பணம் திருடிய வாலிபருக்கு சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு
வேலூர், நவ.6: வேலை செய்த கடையில் பணம் திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் வினோத்(29). இவர் சுண்ணாம்புக்காரர் தெருவில் உள்ள பிரின்டிங் பிரஸ்ஸில் கடந்தாண்டு வேலை செய்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி, இரவு கடையில் இருந்த ரூ.1.30 லட்சத்தை திருடி சென்றார். இதுகுறித்து கடை உரிமையாளர் ராஜேந்திரன் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள 4வது ஜேஎம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரஞ்சிதா, குற்றம் சாட்டப்பட்ட வினோத்க்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.