மூதாட்டியிடம் 3 சவரன் திருட்டு
பள்ளிகொண்டா, ஆக.6: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டனம், நெடுங்கால் கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள்(65). இவர் கடந்த 25ம் தேதி அதேபகுதியை சேர்ந்த 11 பெண்களுடன் மினி பேருந்து மூலம் பள்ளிகொண்டாவில் உள்ள கோயிலில் தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, மதியம் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து பார்த்தபோது கண்ணம்மாளின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து கோயிலின் உட்புறம், வெளிப்புறம் தாங்கள் வந்த மினி பேருந்து என எங்கு தேடியும் நகை கிடைக்காததால் விரக்தியடைந்து மீண்டும் வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், நகை காணாமல் போனது பற்றி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் கண்ணம்மாள் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.