குறை தீர்வு கூட்டம் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு தாசில்தார் தகவல் அணைக்கட்டு தாலுகாவின் மாதாந்திர
அணைக்கட்டு, டிச.5: அணைக்கட்டு தாலுகாவின் மாதாந்திர குறை தீர்வு கூட்டம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தாசில்தார் தெரிவித்தார். அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த மாதம் நடக்க இருந்த குறைதீர்வு கூட்டம் இன்று (5ம் தேதி) நடைபெறும் என்று விவசாயிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று குறை தீர்வு கூட்டம் நடக்க இருப்பதாக அறிவித்திருந்த கூட்டம், அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாயிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் சுகுமார் கூறுகையில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் கடை ஞாயிறு விழா ஆலோசனை கூட்டம் நாளை (இன்று) ஆர்டிஓ தலைமையில் மார்க்கப்பந்தீஸ்வரர் கோயிலில் நடக்க இருப்பதால், 5ம் தேதி நடக்க இருந்த கூட்டம் வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெறும். மேலும், கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளதால் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.