தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூரில் 107.6 டிகிரி வெயில் பதிவானது வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் அக்னி நட்சத்திரம் முடிந்தும் குறையாமல் சுட்டெரிக்கிறது

வேலூர், ஜூன் 2: அக்னி நட்சத்திரம் முடிந்தும் குறையாத வெயில் தொடர்ந்து சுட்டெரிக்கிறது. வேலூரில் நேற்று 107.6 டிகிரி வெயில் பதிவானதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இந்தாண்டும் கடந்த மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. கத்திரி வெயில் கடந்த 28ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்ததுடன், வெப்பநிலையும் குறையத் தொடங்கியது. அதே நேரத்தில் வட மாவட்டங்களான சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெயில் மற்றும் வெப்ப நிலை குறையவில்லை. கோடை காலத்தில் வேலூர் மாவட்டத்தில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

Advertisement

சாதாரண நாட்களிலேயே சராசரியாக 100 டிகிரி கொளுத்தும் வெயில் தற்போது மேலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வேலூரில் கடந்த மே 1ம் தேதி இந்தாண்டின் அதிகபட்சமாக 110.7 டிகிரி கொளுத்தியது. அடுத்த நாட்களில் 108 டிகிரிக்கு மேல் தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு கோடை மழையால் வெயில் அளவு படிப்படியாக குறைந்தது. 100 டிகிரிக்கு கீழ் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதன்படி நேற்று முன்தினம் 111 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்றும் வேலூரில் 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 10 மணிக்கே உச்சி வெயில் போல் வாட்டி எடுத்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் அனல் காற்று வீசியதால் அவதியடைந்தனர். வாகனங்களில் சென்றவர்கள் அனல் காற்றை தாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.

சாலைகளில் கானல் நீராய் தெரிந்தது. வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் பார், இளநீர், நுங்கு விற்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையில், நேற்று மாலை வேலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த மழையில் நனைந்தபடியே வாகன ஓட்டிகள் சென்றனர். கொளுத்திய வெயிலால், அவதிப்பட்ட மக்களுக்கு, மழையால் அனலின் தாக்கம் சற்று குறைந்து ஆறுதல் அளித்தது.

Advertisement

Related News