மேல்பாடி அருகே கோழி இறைச்சி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
பொன்னை, செப்.30: காட்பாடி தாலுகா மேல்பாடி அடுத்த பாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ராஜேந்திர பிரசாத் (53). இவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததுள்ளார் இந்நிலையில் நேற்று விடியற்காலை 4 மணியளவில் வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த அவரது மகன் நெல்சன் அவர்களுக்கு சொந்தமான இறைச்சி கடைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ராஜேந்திர பிரசாத் தனக்குத்தானே தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் மேல்பாடி போலீசார் விரைந்து சென்று ராஜேந்திரபிரசாத் உடலை கைப்பற்றி அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.