கோர்ட்டில் ஆஜராகாத போக்சோ குற்றவாளி கைது: மைனர் பெண்ணிடம் காதல் டார்ச்சர்
வேலூர், அக்.26:போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் சிவரிஷி(20). இந்த ஆண்டு துவக்கத்தில் மைனர் பெண்ணிடம் காதல் டார்ச்சர் செய்ததாக வந்த புகாரின் பேரில், அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவரிஷி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.தொடர்ந்து கோர்ட் வழக்கு விசாரணையில் ஆஜராகி வந்த சிவரிஷி, அடுத்த வழக்கு விசாரணையில் சாட்சிகள் ஆஜராகும் நிலையில் கோர்ட்டுக்கு வந்தும் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து சென்று விட்டார்.
இதையடுத்து இவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் வேலூர் குட்டைமேடு பகுதியில் சுற்றித்திரிந்த சிவரிஷியை, வேலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான ேபாலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.