ஆசிரியையின் 7 சவரன் செயின் மாயம்: போலீசார் விசாரணை
Advertisement
அரக்கோணம், ஆக.18: அரக்கோணம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்த ஆசிரியையின் 7 சவரன் செயின் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், கீழ் அம்பி பகுதியை சேர்ந்தவர் திவ்ய. இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள நேவி பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திவ்ய பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், திவ்ய வீடு திரும்பினார். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயின் மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
Advertisement