அரசின் மாநில கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு
வேலூர், ஆக.11:தமிழக அரசு வௌியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் ராமஜெயம், அமைப்பு செயலாளர் ஜெகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கை-2025 தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மனதார வரவேற்கிறது. 76 பக்கங்கள் கொண்ட மாநில கல்விக்கொள்கை தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். சமவாய்ப்பு உள்ளடங்கிய மற்றும் சமூக நீதி, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு, 21ம் நூற்றாண்டில் திறன்கள், எதிர்கால திறன்களை மற்றும் எண்ம கல்வி அறிவு மதிப்பீட்டு சீர்திருத்தங்கள் ஆசிரியர் திறன் மேம்பாடு மற்றும் பணி சார் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் உள்ளடங்கிய பள்ளிகள் மற்றும் குழந்தை மேம்பாடு, எதிர்கால பள்ளிகளுக்கான நெகிழிவுத்தன்மை மற்றும் நிலையான உள்கட்டமைப்பு, சமூக ஈடுபாடு மற்றும் நிர்வாக பரவலாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், டிஜிட்டலைசேஷன், தொழிலுக்கான ஆயத்த நிலை மற்றும் உலகளாவிய அனுபவம், மாணவர் பாதுகாப்பு ஈடுபாடு மற்றும் நல வாழ்வு, பள்ளி கல்வி வரவு செலவு திட்டம், மாநில மொத்த வருவாய் ரூ.44 ஆயிரத்து 42 கோடியில் 13.7 சதவீதம், பின்தங்கிய மற்றும் மெல்லக் கற்போருக்கான இடைவினைகள், உள்கட்டமைப்பு மற்றும் உதவி சேவைகள் வழி உள்ளடங்கிய கல்வியை வலுப்படுத்துதல், பாலின சமத்துவம் பாதுகாப்பை உறுதி செய்தல் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கிய சமூக நீதி கொள்கைகளை முன்னிலைப்படுத்தி வெளியிட்டுள்ள தமிழகத்தின் மாநிலக் கொள்கையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் முழுமையாக வரவேற்கிறது.
தமிழக அரசானது இந்த கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தமிழகத்தின் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினையும், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது