நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த தந்தை- மகன் உட்பட 6 பேர் கைது 4 துப்பாக்கிகள் பறிமுதல் குடியாத்தம் அருகே வேட்டையாடுவதற்காக
குடியாத்தம், ஆக. 4: குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை தயாரித்த தந்தை, மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அரசின் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி டவுன் போலீசார் கல்லேரி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.