பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது
வேலூர், செப்.3: வேலூர் தொரப்பாடி அரியூர் ரயில்வே கேட் எஸ்.கே.ராமன் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரராஜா. இவரது மனைவி சேனாவதி(40). இவர் கடந்த 29ம் தேதி காலை தனது வீட்டின் முன்பு சாலையை பெருக்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டுரங்கன்(49), சேனாவதியை பார்த்து ஆபாசமாக பேசியபடியே கீழே கிடந்த கல்லை எடுத்து அவர் மீது எறிந்துள்ளார். இதுதொடர்பாக சேனாவதி கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டுரங்கனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement