பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைவு
ஓசூர், ஜூலை 14: வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி வடக்கு ஒன்றியம், புக்கசாகரம் கிராமத்தில், திமுக வர்த்தக அணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் வரவேற்று பேசினார். முன்னாள் எம்எல்ஏ முருகன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, பங்கேற்று நலதிட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக புக்கசாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னராஜ், வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.