சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் நெய் விளக்கேற்றி பக்தர்கள் தரிசனம்
Advertisement
மதுரை, ஜூன் 10: சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அழகர்கோயில் மலைமேல் உள்ள முருகப் பெருமானின் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி வசந்த விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மே 31ம் தேதி தொடங்கியது. இதில் மூலவர் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் சுவாமிக்கும் காப்புகள் கட்டி பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதன் முக்கிய நிகழ்வாக நேற்று வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது.,
இதற்காக அதிகாலையிலே கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
Advertisement