ஐக்கிய ஜனாதிபத்ய முன்னணி மாவட்ட மகளிர் செயற்குழு கூட்டம்
பாலக்காடு, அக். 26: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனாதிபத்ய முன்னணி மாவட்ட மகளிர் செயற்குழு கூட்டத்தை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் தொடங்கி வைத்து பேசியதாவது: கேரளாவில் பாலக்காடு, சேலக்கரா ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும், வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைதேர்தல் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் 180 பூத்களிலும் மகளிர் செயல்பாடுகள் கூடுதல் கண்காணிப்புடன் செயல்படுத்த வேண்டும். கடந்த முறை ஷாபிபரம்பில் வெற்றிப்பெற்ற இடத்தை மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் கைப்பற்றும் விதத்தில் தங்களது பிரச்சாரத்தை மகளிர்களிடம் பயன்படுத்த வேண்டும்.
அனைத்துத் தரப்பினரும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய மகளிர் அணியினர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிந்து ராதாகிருஷ்ணன் தலைமைத்தாங்கினார். மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் எம்.பி. வக்கீல் ஜெபி மேத்தர், எம்.பி. ஷாபிபரம்பில் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். மகளிர் லீக் மாவட்ட செயலாளர் ஷெரீனா பஷீர், ஷாபிரா, ஆரிபா முகமது, சாந்தம், நவுபியா நஷீர், சுபைதா முகமது, ஸ்பனா ராமசந்திரன், புண்ணியகுமாரி, இந்திராதேவி, கீதா சிவதாஸ், கீதா உஷா, ஜெயமாலா, பாஞ்சாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.