ஒன்றிய பேரவை கூட்டம்
சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கௌதம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜ் பேசினர். ஒருங்கிணைப்பாளராக ஜீவானந்தம், துணை ஒருங்கிணைப்பாளர்களாக குணா, பொன்னுச்சாமி தேர்வு செய்யப்பட்டனர்.
சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் வழி செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளிலும் தேவையான மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.