இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மேலும் இதேபோன்று திருப்போரூர் தொகுதி விசிக எம்எல்ஏ பாலாஜி கலந்துகொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதேபோன்று மதுராந்தகம் தொகுதி அதிமுக கட்சி எம்எல்ஏ மரகதம் குமரவேல், இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய நகர பேரூர் அதிமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர். மேலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விசிக கட்சி சார்பில் கோழியாளம் கிராமத்தில் மாவட்டச் செயலாளர் பொன்னிவளவன் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று இரட்டைமலை சீனிவாசன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து பிறகு நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அன்புச்செல்வன், கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் பித்தன், நூர்ஜகான், ஜெயந்தி, ஆதித்தமிழன், வீரா, உதயா, சீனு, அசோக், தமிழரசன், நரேஷ், கேசவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் இதேபோன்று அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய விசிக கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா கோழியாளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஒன்றிய செயலாளர் தயாநிதி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர்கள் தமிழினி, எழிலரசன், தென்னவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன், மாவட்ட நிர்வாகிகள் கலை கதிரவன், பேரறிவாளன், விஜயகுமார், வேலவன், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், கதிர்வாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.