போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது
திருச்சி, அக்.30: திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அக்.28ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பூக்கொல்லை பகுதியில் போதை மாத்திரை விற்றதாக உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்த முகமது சைப்(28), வரகனேரி சந்தானபுரம் பகுதி சேர்ந்த அசன்அலி(27) ஆகிய இரண்டு ரவுடிகள் மற்றும் மகாலட்சுமி நகரை சேர்ந்த ஹஜிபுதின் (25) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 190 போதை மாத்திரைகள் மற்றும் ஊசியை பறிமுதல் செய்தனர். மேலும், 18 வயது சிறுவனை உறையூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement