தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெறும்பூர் அருகே நடவு செய்த 20 நாளில் கருகிய சம்பா நெற்பயிர்

திருவெறும்பூர், அக்.30: திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங் குடியில் நடவு செய்து 20 நாட்களே ஆன சம்பா நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது புலம்பி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடியில் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி தொடங்கி தற்பொழுது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் நடவு செய்து 20 நாட்கள் ஆன நெற்பயிர்கள் முளையிலேயே கருகி வருகிறது.

Advertisement

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் இதுவரை வந்து பார்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து திருவெறும்பூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுகன்யாவிடம் கேட்டபோது, அதுபோல் எந்த வித தகவலும் தங்களுக்கு வரவில்லை, தங்களது அலுவலர்கள் அங்கு சென்று வருவதாகவும், ஆனால் எந்த தகவலும் இல்லை.

இருந்தாலும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பாதிப்படைந்த விளை நிலங்களை பார்வையிட்டு பயிர் செய்யப்பட்டுள்ள நெல் ரகம் என்ன என்பதையும், பாதிப்புக்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தேவைப்பட்டால் அறிவியல் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து பயிர் கருகுவதற்கு உரிய காரணத்தை கண்டறிந்து அதற்கு உரிய தீர்வுகளை கூறி இப்பிரச்னையை தீர்க்கப்படும் என்றார்.

 

Advertisement