திருச்சியில் போதை மாத்திரையுடன் வாலிபர் சிக்கினார்
திருச்சி, ஆக.30: திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருச்சி பொன்மலைப்பட்டி சாலை அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக பொன்மலை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
Advertisement
இதில், திருச்சி வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்த ஹசன் அலி (27) என்பதும், அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் வாலிபர் மீது வழக்குபதிந்து, 100 போதை மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில், 15 மருத்துவ ஊசிகள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.
Advertisement