முசிறி எம்ஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா
முசிறி, செப். 27: முசிறி எம்ஐடிமகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் எம். ஐ. டி கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு எம்ஐடிகல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் பிரவீன் குமார் தலைமை வகித்தார்.எம்ஐடிகல்வி நிறுவனங்களின் ஆலோசகர் நடராஜ் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் சென் னை நாஸ்காம் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் உதய சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.எம்ஐடிகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற 600 மாணவிகள் மற்றும் கல்வியியல் கல்லூரியில் பயின்ற 100 மாணவிகள் பட்டங்கள் பெற்றனர்.
எம்ஐடிகலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர். கலைவாணி வரவேற்றார். சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆதித்யா நடராஜ் வாழ்த்துரை வழங்கினார். எம்ஐடி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். சாந்தி மற்றும் எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர். ரகுச்சந்தர் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை கல்லூரிகளின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.