மத்திய, மாவட்ட வங்கிகள் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணி
திருச்சி, நவ.22: திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவிப்பு கடிதத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் எழுத்து தேர்வுக்கான கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்புகள், திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த எழுத்து தேர்விற்க்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் நவ.24ம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தால் இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.24 அன்று நடக்க உள்ளது.
இந்த மாதிரி நேர்காணல், சிறந்த நேர்காணல் குழுவால் நடத்தப்படும். இலவச மாதிரி நேர்காணலில் எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு 0431-2413510, 94990 55901 என்ற மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சரவணன்
தொிவித்துள்ளார்.