அரசு ஓய்வு ஊழியர்களின் மாநாடு
திருச்சி, நவ. 20: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. மாநாட்டுக்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகுத்தார். மாநில துணைத்தலைவர்கள் நடராஜன், எட்டியப்பன், வேலாயுதம், மற்றும் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 23ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. டிசம்பர் 17ம் தேதி மாவட்ட வாரியாக ஓய்வூதியர் தினம் கொண்டாடுவது. டிசம்பர் 21ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி 5 ஆயிரம் பேர் திரண்டு பேரணி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.