உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டு
தா.பேட்டை, ஆக.21: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் சரவணன் அறிவுரை வழங்கினார். திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் வேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் மகாதேவி மற்றும் காருகுடி பகுதிகளுக்கு நடைபெற்றது. முகாமிற்கு திருச்சி கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் முகாமை துவக்கி வைத்தார்.
தாசில்தார் லோகநாதன், ஆணையர் அந்தோணி தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடும்ப அட்டை பட்டா பட்டா மாறுதல் நில அளவை கலைஞர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். திருச்சி கலெக்டர் சரவணன் முகாமில் பேசுகையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது துரிதமாக விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீதான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முகாமில் திமுக நிர்வாகிகள் பெரியசாமி ஆப்பிள் கணேசன், மயில்வாகனன், பிரபாகரன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.