திருச்சி என்ஐடியில் 51வது பெஸ்டம்பர் கலை போட்டி தொடக்கம்
திருவெறும்பூர், செப். 19: திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் 51வது ஆண்டு பெஸ் டம்பர் எனும் கலைப்போட்டி விழா ரகசியங்களின் சகாப்தம் என்ற பெயரில் நேற்று தொடங்கியது. பெஸ்டம்பர் தொடக்க விழாவிற்கு என்ஐடி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். இந்திய திருநங்கையர் உரிமையை இயக்கத்தின் நிர்வாகி கௌரி சாவந்த் விளக்கி கூறினார்.
Advertisement
இந்த விழாவில் முதல் நாளான நேற்று என்ஐடி கல்லூரி இசைக்குழு, நடன குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று முதல் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இருந்து வந்துள்ள மாணவ மாணவிகளின் ஆடல், பாடல், இசை உள்ளிட்ட பல்வேறு கலை சம்பந்தமான போட்டிகள் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என்ஐடி கல்லூரி சார்பில் பரிசுகள் வழங்கப்படும்.
Advertisement