கருஞ்சோலைப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மணப்பாறை, அக்.18: மணப்பாறை அடுத்த கருஞ்சோலைப்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை வருவாய் வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். மக்களை நாடி அரசு சேவைகளை அளித்தும் வரும் முதலமைச்சரின் திட்டமான உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சிகளுக்கான முகாம் கருஞ்சோலைப்பட்டி சமுதாயக்கூடத்தில் நேற்று நடைபெற்றது.
தாசில்தார் சுந்தரபாண்டியன், திமுக ஒன்றியசெயலாளர் ராமசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தனர். 15 அரசு துறை சார்ந்த அலுவலர்கள் 46 சேவைக்களுக்கான மனுக்களையும், பதிவு செய்து உரிய தீர்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இதில் பெறப்பட்ட மொத்த 509 மனுக்களில் 226 மனுக்கள் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்கான மனுக்களாக பெறப்பட்டுள்ளன. நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர்.