துறையூர் அருகே கார் மோதி முதியவர் பலி?
துறையூர், செப்.18: துறையூர் அருகே நடந்த விபத்தில் காயமடைந்த முதியவர் மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு வந்த பின் உயிரிழந்ததையடுத்து அவரது மனைவி தனது கணவர் விபத்தில்தான் உயிரிழந்ததாக போலீசில் புகார் அளித்தார். துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரம் அண்ணா நகரை சேர்ந்த சிக்கக் கவுண்டரின் மகன் வடிவேல் (69). இவரது மனைவி தனம் (68). கடந்த செப். 1ம் தேதி ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பியவர் துறையூர் பெரம்பலூர் சாலையின் குறுக்கே சாலையை கடக்க முயற்சித்தபோது, பெரம்பலூரிலிருந்து துறையூர் நோக்கி சென்ற கார் வடிவேல் மீது மோதியது.
இதிப் படுகாயம் அடைந்த அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து செப். 15ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். அதன்பிறகு பெருமாள்மலை அடிவாரத்திலுள்ள வீட்டுக்கு சென்ற வடிவேலு நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் தன் கணவர் விபத்தினால் ஏற்பட்ட காயத்தினால் தான் உயிரிழந்தார் என்று அவரது மனைவி துறையூர் போலீசில் மீண்டும் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணாத்துரை மகன் அஜீ த்தை தேடி வருகின்றனர்.