திருச்சி மாவட்டத்தில் 10,562 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது
திருச்சி,அக்.17: திருச்சி மாவட்டத்தில் 10,562 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது என்று வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருச்சி மாவட்டத்தின் ஆண்டு இயல்பான சராசரி மழையளவு 788.08 மி.லிட்டர் ஆகும். நடப்பாண்டில் 15.10.2025 வரை 421.55 மி.லிட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. ரசாயன உரங்களான யூரியா 2787.675 மெ.டன், டிஏபி 1531.350 மெ.டன், பொட்டாஷ் 1169.560 மெ.டன், காம்ப்ளக்ஸ் 4511.201 மெ.டன் மற்றும் எஸ்.எஸ்.பி. 562.715 மெ.டன் என மொத்தம் 10,562 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அளவு பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்திற்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ள ராசயன உரங்களை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.