செப்.19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Advertisement
திருச்சி,செப்.16: திருச்சி மாவட்டத்தில் செப்.2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப். 19ம் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ, மனுக்கள் மூலமாகவோ தொிவிக்கலாம். மேலும் விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொ ள்ளலாம் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Advertisement