சிறுமி கர்ப்பம்: வாலிபர் சிக்கினார்
Advertisement
திருச்சி, செப்.16: திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்தவர் ஹரி(25). இவர், கல்லூரி முதலாமாண்டு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11ம் தேதி வாலிபர், சிறுமியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் ஹரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement