மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை எழுதும் பயிற்சி
Advertisement
திருச்சி, செப். 15: திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் இணைந்து சிறார் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிக்காக மாவட்ட நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை எழுதும் பயிற்சி நேற்று நடந்தது.
இப்பயிற்சியில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். சிறார்களுக்கு கதை எழுதும் பயிற்சியினை சிறார் எழுத்தாளர் கதை சொல்லி கார்த்திகா வழங்கினார்.
மேலும் குழந்தைகளுக்கான வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வரும் சதுரங்கப் பயிற்சி நடைபெற்றது. சதுரங்கப்பயிற்சியாளர் சி.எஸ்.சங்கரா பயிற்சியளித்தார். இந்நிகழ்வில் வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமை வகித்தார்.
மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலெட்சுமி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Advertisement