காவேரியில் மணல் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்
தொட்டியம், ஆக. 15: திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த காடுவெட்டியில் காவிரி ஆற்றிலிருந்து திருட்டு மணல் அள்ளுவதாக தொட்டியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தொட்டியம் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று இரவு காவேரி கரையில் பிடாரி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து மேற்கொண்டனர்.
Advertisement
அப்பொழுது காவிரி ஆற்றில் 4 வண்டிகளில் மணல் திருட்டுதனமாக அள்ளப்படுவதை கண்ட அவர்கள், அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டதும், வாகன ஓட்டுனர்களும், தொழிலாளர்களும் வாகனத்தை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனை தொடர்ந்து 4 வாகனத்தையும் காட்டுபுத்தூர் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து வழக்கு பதிந்து, தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement