குட்கா பதுக்கிய வாலிபர் மீது வழக்கு
திருச்சி, ஆக. 14: திருச்சி தில்லைநகர் பகுதியில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆக.12ம் தேதி தில்லைநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆழ்வார்தோப்பு சின்னசாமி நகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில், புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
இதனையடுத்து தென்னூர் ஆழ்வார் தோப்பு இதயாத் நகரைச் சேர்ந்த அஷ்ரப் அலி (31) மீது வழக்கு பதிந்து அவரிடம் இருந்த 658.5 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் 1 செல்போன், ரூ.150 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement