போலி பாஸ்போர்ட் முதியவர் கைது
திருச்சி,அக்.13:போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 10ம் தேதி கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
Advertisement
அப்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (63) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Advertisement