லால்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
லால்குடி, செப்.13:லால்குடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி நகாட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஆணையர் குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் முகாமினை துவக்கி வைத்தார்.
Advertisement
முகாமில் புதூர் உத்தமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை நடத்தினர். முகாமில் நகர் மன்ற துணை தலைவர் சுகுணா ராஜ்மோகன், மன்ற உறுப்பினர்கள் செந்தில் மணி, முகமது பெரோஸ், மருதமலையான் நகராட்சி மேலாளர் அமுதவள்ளி, துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement