தீ பாதுகாப்பு விழிப்புணர்வு
திருச்சி,அக்.12: திருச்சி கோர்ட் அருகிலுள்ள மத்திய மண்டல தீயணைப்பு நிலைய இயக்குனர் அலுவலகத்தில் வாங்க கற்றுக் கொள்வோம், தீ பாதுகாப்பு அறிவோம் உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை மத்திய மண்டல துணை இயக்குனர் முரளி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத் மற்றும் உதவி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் லியோ ஜோசப், கருணாகரன், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தீ தடுப்பு குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் விரிவாக எடுத்து உரைத்தனர்.
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “வாங்க கற்றுக்கொள்வோம்” என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு அறிவோம் உயிர்களை காப்போம் என்ற வாசகங்களுக்கு ஏற்ப துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையின் நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர் வேல்முருகன் தீயணைப்பு நிலையை வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்து விளக்க உரையாற்றினார். தொடர்ந்து தீயினால் எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்வது என்றும், தீ பற்றினால் அதை எவ்வாறு அணைக்க வேண்டும் என்றும் செய்முறை விளக்கமும் செய்து காண்பித்தார். மேலும் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது என்ற செய்முறை விளக்கத்தையும் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர்.