ஸ்ரீரங்கத்தில் இ.கம்யூ. காத்திருப்பு போராட்டம்
திருச்சி, செப். 11: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ரீரங்கம் மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை, சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை, பொதுக் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி துணைத்தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா மற்றும் பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை பின்பகுதியில் பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது. ஆட்டோ டிரைவர்கள் அதிகமாக கட்டண வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.