தஞ்சாவூர் துணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் போராட்டம்
Advertisement
திருச்சி, அக். 10: ஊழியர் விரோத போக்கோடு செயல்படும் தஞ்சாவூர், சரக துணைப்பதிவாளர் விநாசாந்தினி மீது நடவடிக்கை எடுக்க கோரி செவ்வாயன்று (அக்டோபர் 7) திருச்சி இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது, கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு செய்ய வேண்டும். 6 மணிக்கு மேல் கூகுல் மீட்டிங், ஆய்வு கூட்டம் நடத்தும் உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத் தலைவர் வினோத் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்ட செயலாளர் செல்வ மோகன், மாவட்ட பொருளாளர் லோகநாதன், தமிழ்நாடு சரக ஊழியர்கள் சங்கம், திருச்சி மாவட்ட தலைவர் முனைவர் பால்பாண்டி மற்றும் 40 கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement