லால்குடி அரசு கலைக் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
லால்குடி, ஆக.9: லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகி த்து மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகைகள் மற்றும் அரசின் சலுகைகள் குறித்து பேசினார். பேராசிரியர் சுகன்யா வரவேற்றார்.
இந்த நிகழ்வில் கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர்கள் அசோக்குமார், வணிக மேலாண்மைத் துறைத்தலைவர் சுலைமான் வாழ்த்துரை வழங்கி பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசு மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையான, குறிப்பாக நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற அரசு உதவித்தொகைககள் குறித்து பெற்றோர்களிடம் விளக்கி பேசினர். துறைத் தலைவர்கள் எழில்பாரதி, சின்னத்தம்பி, தமிழ்மணி, ராஜா, அனிதா மற்றும் ஹேமா சரவணன், வேம்பு, சந்தான லெஷ்மி, நிதியாளர் ராஜலெட்சுமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.