வணிகவியல் பேரவை சொற்பொழிவு
Advertisement
திருச்சி, அக்.7: தேசியக் கல்லூரியின் வணிகவியல் பேரவை (சுயநிதி பிரிவு) சிறப்பு சொற்பொழிவு கூட்டம் முதல்வர் சாரநாதன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் முத்துராமகிருஷ்ணன் தனது முதன்மை உரையில் வணிகவியல் துறை மாணவர்கள், துறை ரீதியிலான புதிய வளர்ச்சியான ஜி எஸ் டி 20 பற்றிய நுண்ணறிவை வளர்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி கூறினர்.
துணை முதல்வர் (சுயநிதி பிரிவு) முனைவர் பிரசன்ன பாலாஜி, தனது முதன்மை உரையில், மாணாக்கர்கள் தங்களுடைய கல்வியில் ஆக்கபூர்வமான வளர்ச்சியை மேற்கொள்வதற்கு வணிகவியல் சங்கப் பேரவை கூட்டம் பெரும் உதவியாக இருக்கிறது என்று கூறினார்.
Advertisement