தலைமை அஞ்சலகத்தில் தீ
திருச்சி, ஆக.7: திருச்சி தலைமை தபால் நிலையத்தில் நேற்று மின்கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள வணிக அஞ்சல் மைய பிரிவில் நேற்று காலை திடீர் மின் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மின் வயர்களில் தீ பற்றி எரிய துவங்கி, அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் மின் இணைப்பை முன்னனெச்சரிக்கையுடன் துண்டித்தனர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது. தீ பரவியதை தொடர்ந்து உடனடியாக அங்கு நின்றிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.