பெரமங்கலத்தில் 100 நாள் பணியாளர்கள் மூலம் 800 பனை விதைகள் நடப்பட்டது
துறையூர், நவ. 5: பெரமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமைப்பு தினத்தை முன்னிட்டு பனை விதை நேற்று நட்டனர். திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 45ம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு நெய்வேலி பெரிய கொடுந்துறை பெரமங்கலம் கிளையில் கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது அச்சங்கத்தின் அமைப்பை பற்றி மக்களுக்கு எடுத்து கூறினர்.
Advertisement
சங்கத்தின் சார்பாக பெரமங்கலத்தில் முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுக்குளம் கணேசன் கலந்துகொண்டு பனை விதை நடும் பணியினை துவக்கி வைத்தார். பின்னர் 100 நாள் பணியாளர்களை கொண்டு 800 பனை விதைகள் குட்டையில் நடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பனை லோகு கலந்து கொண்டார். சத்யராஜ், யுவராஜ், பாஸ்கர், லோகேஷ் கோகுலகண்ணன் பிரபாகரன், முருகானந்தம் ரெங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement