பணம் பறித்த வாலிபர் கைது
திருச்சி, ஆக.6: திருச்சியில் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, கே.கே.கோ ட்டை பாண்டி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (40). கடந்த 3ம் தேதி எஸ்ஐடி கல்லூரி அருகே இளநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்து ஆயிரம் ரூபாய் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
Advertisement
இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமங்கலம் காமராஜ் நகர் அப்துல்லா தெருவை சேர்ந்த ராகவேந்திரன் (26) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கத்தி மற்றும் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement