காஜாமலையில் புதைவடிகால் திட்டப்பணி
திருச்சி, ஆக.6: திருச்சி மாநகராட்சி காஜாமலையில் நடந்து வரும் புதைவடிகால் திட்டப்பணிகளை மேயர் அன்பழகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்-4ல் உள்ள வார்டு எண் 60, காஜாமலை அய்யனார் கோயில் வீதியில் புதை வடிகால் திட்டப்பணி நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் அன்பழகன், பொறியாளர்கள் மற்றும் மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என பணி யில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறு த்தினார். இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், மண்டல தலைவர் துர்கா தேவி, உதவி கமிஷனர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் விஜய் மற்றும் பலர் உடன் இருந்தனர்.