மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு புதிய மின்கம்பங்கள் அமைத்து டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு
சமயபுரம், நவ.5: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல்நிலையம் நுழைவு வாயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உயர் மின் உற்ப த்தி டிரான்ஸ்பர்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அப்பகுதியில் உள்ள ரைஸ்மில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தென்பட்டு வளைந்து நிலையில் காணப்பட்டது.
இதனால் டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள், முதியவர்கள், டிரான்பார்மரை கண்டு அச்சத்துடன் வந்து சென்றனர். இதன் காரணமாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று துணை மின் நிலையத்தில் கோரி க்கை மனு அளித்தனர்.
ஆனால்எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த நவம்பர் 2ம்தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக துணை மின்வாரிய உதவி மின் பொறியாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் கேங்மேன் சுந்தர்ராஜ், கிருஷ்ணன், பிரகாசம், கோபி, கார்த்திக் மற்றும் ராஜா ஆகிய ஊழியர்கள் அங்கு சென்று சேதமடைந்த மின்கம்பங்கங்களை கிரைன் உதவியுடன் அகற்றி புதிய மின்கம்பங்களை நட்டு, டிரான்ஸ்பார்மரை சீரமைத்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மின்வாரியத்திற்கு நன்றி தெரிவித்தனர்.