சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் தொழிலாளி கைது
திருவெறும்பூர், அக்.4: திருவெறும்பூர் அருகே காதல் அசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரஞ்சித்(30) சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இச்சம்பவம் பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் ரஞ்சித்தை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.