லால்குடி அரசு கலை கல்லூரியில் கலை திருவிழா போட்டி
லால்குடி, அக். 4: லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலைத்திருவிழா கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
Advertisement
கலைத் திருவிழா போட்டியில் விவாத மேடை,புதையல் போட்டி,தனிநபர் நடனப்போட்டி போன்ற போட்டிகளை தலைமை ஒருங்கிணைப்பாளரும் வணிக மேலாண்மைத் துறைத்தலைவரும் பேராசிரியர்கள் சுலைமான், ஒருங்கிணைப்பாளர் ராஜா, அசோக் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சுகன்யா, நமக்கு நாமே திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தீபாதேவி, தேன்மொழி மற்றும் பேராசிரியார்கள் எழில் பாரதி, சின்னத்தம்பி, கனகராஜ், ஆனந்த், உமாபாரதி,கி ருஷ்ணவேணி மற்றும் மாணவ. மாணவிகள் கலந்து கொண்டனர்.
Advertisement