விபத்து மண்டல பகுதியில் பேரிகார்டு
திருச்சி, நவ.1:திருச்சி மாநகர பகுதியில் விபத்து நட க்கும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை ஆய்வு செய்த மாநகர கமிஷனர் காமினி, போ க்குவரத்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் திருச்சி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பால்பண்ணை முதல் காட்டூர் பாப்பாக்குறிச்சி வரை அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைக்கும் பொருட்டு ஆங்காங்கே காவல் துறை சார்பில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேற்று மாலை பால் பண்ணை பகுதியில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது துணை கமிஷனர் ஈஸ்வரன், போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.தொடர்ந்து மாநகர கமிஷனர் காமினி, அப்பகுதியில் தேசிய ெநடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் நுழையும் போது, வேகத்தை குறைக்க ஏதுவாக தேவைப்படும் இடங்களில் பேரி கேடுகளை வைக்கவும், வாகனங்கள் அதிகரிக்கும் நேரங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும், போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனரு க்கு அறிவுரை வழங்கினார்.