துறையூர் நகராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்து வார்டு சிறப்பு கூட்டத்தில் மனு
Advertisement
துறையூர், அக்.29: துறையூர் நகராட்சியில் நசந்த வார்டு சிறப்பு கூட்டத்தில் அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.துறையூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படிதுறையூர் நகராட்சியில் 13வது வார்டில் நடைபெற்ற சிறப்பு வார்டு கூட்டத்திற்கு நகர் மன்ற உறுப்பினர் அம்மன் பாபு வைத்து பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் முரளி, மோகன்ராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement