ப்ரோ கபடி போட்டி வீரருக்கு காட்டூரில் சிறப்பான வரவேற்பு
திருவெறும்பூர், அக்.29: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த வீரர் ப்ரோ கபடி போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடி விட்டு சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு காட்டூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகவும், வீர விளையாட்டாகவும் கபடி போ ட்டி உள்ளது. இப்போட்டி கிராமங்களில் நடந்து வந்த நிலையில், தற்பொழுது தேசிய அளவில் ப்ரோ கபடி போட்டிகள் நடைபெறுகிறது.அதில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் தங்களது திறமையால் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அணிகளில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள கட்டூரை சேர்ந்த தீபக் சங்கர் பெங்களூர் அணிக்காக ப்ரோ கபடி போட்டியில் தேர்வாகி விளையாடுகிறார். அப்படி ப்ரோ கபடியில் விளையாடி விட்டு சொந்த ஊரான திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூருக்கு வந்தபோது, காட்டூர் பகுதியைச் சேர்ந்த கபடி வீரர்கள் தீபக் சங்கருக்கு சிற ப்பான வரவேற்பு அளித்தனர்.