திருச்சி அருகே கொலை வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்
திருச்சி அக்.26: திருச்சி துறையூர் ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ் (35) என்பவர் தனது மனைவி மாதவி வீடான தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், முன் விரோதம் காரணமாக கடந்த 2.9.2025-ம் தேதி இரவு முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே துறையூர் ஆலத்துடையான்பட்டி பகுதியை சேர்ந்த கல்பேஷ் (35), அஸ்வின்குமார் (26), ஆகியோர் சுரேஷை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து ஆலத்துடையான்பட்டி பகுதியை சேர்ந்த கவியரசன்(32), தொட்டியம் அர்ஜுன தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி (19), பிரவீன் (31)பரமேஸ்வரன் (26)ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து வரும் கல்பேஷ், அஸ்வின்குமார், கவியரசன், ஆகியோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று சிறையில் உள்ளவரிகளிடம் சார்வு செய்யப்பட்டது. மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 91 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.